தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புக்கும் கூட்டணிகளில் ஒரு கூட்டணி நடிகர் தனுஷ் -இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர்களது கூட்டணியில் வெளியான மயக்கம் என்ன , பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், மாறன் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
unknown nodeஇதையும் படியுங்களேன்-சாய் பல்லவியின் மீது வழக்கு பதிவு.!? போலீசார் கொடுத்த விளக்கம்.!
இந்த வெற்றிகளை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி “வாத்தி” எனும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்குகிறார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார்.
unknown nodeப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனுஷ் மற்றும் இயக்குனர் வெங்கட் அட்லுரியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியீட்டு வாத்தி படத்தின் பாடல் பதிவு செய்யும் பணி நடந்து வருவதாகவும், அது நடனமாடக்கூடிய வகையில் இருக்கும் எனவும் அப்டேட் கொடுத்துள்ளார்.
#vaathi song recording on progresssss @dhanushkraja #venkyatluri @SitharaEnts @vamsi84 … some heavy dance coming up ???????? pic.twitter.com/e7q70a0bUQ
— G.V.Prakash Kumar (@gvprakash) June 17, 2022