ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த திரைப்படம் விருது வாங்கியது!

Dhanush won the award at the Hollywood Film The Extranary Journey of Fagir

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தனது திறமையை தமிழில் மட்டு மல்லாமல் பாலிவுட் , ஹாலிவுட் சினிமாவிலும் காட்டி வருகிறார்.இவர் பாலிவுட்டில் முதலில் நடித்த “ராஞ்சனா”திரைப்படம் மாபெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் ஹாலிவுட் திரைப்படமான “தி எக்ஸ்ட்ரானரி ஜர்னி ஆஃப் ஃபேகிர்” என்ற படத்தில் நடித்தார்.இப்படம் கடந்த ஆண்டு மே 18-ம் தேதி வெளியானது. இந்த படம் காமெடி அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு  பார்சிலோனா, சாண்ட் – ஜோர்டி சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வில் சிறந்த காமெடி படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.