தனுஷ் இயக்கத்தில் 4வது படம்.. வெளியானது 'D52' அறிவிப்பு.!

தனது 4 வது படத்தை இயக்குகிறார் நடிகர் தனுஷ். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

Dawn Pictures -D52

சென்னை :இயக்குனர் சேகர் கம்முலாவுடன் ‘குபேரா’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தனுஷ், தற்போது தனது ’52’ வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் கடைசியாக, தான் இயக்கிய ‘ராயன்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது, அவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படமான “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் இயக்கும் 4வது படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘D52’ என்று பெயரிடப்பட்டது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கையில் அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடிப்பதா,வும் , அசோக் செல்வன், நித்யா மேனன், சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை உறுதிப்படுத்த இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்க வேண்டும்.