தற்போதைய தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியனாகவும் அதிக படம் நடித்து வரும் ஒருவராக இருப்பவர் யோகிபாபு.இவர் தற்போது இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட கதாநாயகனும் காமெடியனுமான நடிகர் யோகிபாபு கூறியதாவது,
unknown nodeஇப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள் அதாவது பூலோகத்தில் ஒருவர்.எமலோகத்தில் ஒருவர். நாங்கள் இருவரும் 15 ஆண்டு கால நண்பர்கள்.மேலும் அவர் கூறியதாவது, யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்கள். யாருமே இல்லாத இடத்தி விளையாடமுடியாது.
unknown nodeஎல்லோரும் உள்ளார்கள் அவரவர் வேலையை அவரவர் செய்து வெற்றி பெறுகிறார்கள் என்றார். மேலும் முதலில் எனக்கு இப்படத்தில் மேக் அப் போட்ட போது ,அதில் யாருக்குமே திருப்தி இல்லை. அப்போது என்னிடம் ரேகா கூறினார், இந்த வேஷம் போட்டால் தானாகவே திமிர் வந்துவிடும் என்று.இந்த வேஷம் போடும் போது நான் அப்படியேதான் உணர்ந்தேன்.
unknown nodeஆண்டவன் கட்டளை, பரியேறும் பெருமாள் போன்ற படங்களை அடுத்து இப்படமும் பேசப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.தர்மபிரபு படம் குறித்து மனம் திறந்த யோகிபாபுவின் பேச்சு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
DINASUVADU.