நான்காவது முறையாக பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் ஹரி.!

It has been reported that Vikram will be directing the film for the fourth time following director Hari Sami-2.

இயக்குனர் ஹரி சாமி-2 படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக விக்ரம் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களை ரசிகர்களுக்கு அளித்தவர் ஹரி.சமீபத்தில் இவர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.ஆனால் அந்த திரைப்படம் சில பல காரணங்களால் கைவிடப்பட்டதை அடுத்து அவரது மச்சானும் ,நடிகருமான அருண் விஜயை வைத்து கிராமப்புற கதையை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இயக்குனர் ஹரி நான்காவது முறையாக பிரபல நடிகருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே நடிகர் விக்ரமை வைத்து சாமி ,அருள்,சாமி-2 உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .நான்காவது முறையாக இணையும் இவர்களின் படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.