சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் சுசீந்திரன்.!

Following Simbu's Eeswaran, director Suchindran is said to be directing the film with Udayanithi Stalin next.

சிம்புவின் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சுசீந்திரன் கடைசியாக சாம்பியன் எனும் படத்தை இயக்கியிருந்தார்.தற்போது இவரது இயக்கத்தில் மூன்று படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.இவர் இயக்கிய ஏஞ்சலினா கடந்தாண்டு வெளியாகவிருந்தது .அதே போன்று ஜெய் நடிக்கும் சிவசிவா படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் படத்தினை இயக்கினார் .

சமீபத்தில் அதன் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது . சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது சுசீந்திரன் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உதயநிதி ஸ்டாலின் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் படத்திலும் , அருண் ராஜா காமராஜ் இயக்கும் ரீமேக் படமான “ஆர்டிக்கிள்15” படத்திலும் நடிக்கிறார்.விரைவில் இதனை முடித்து விட்டு சுசீந்திரன் இயக்கும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது