தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரின் சர்கார் படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் ஒரு விரல் பாடல் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வெற்றி பெற்றது.
தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் தளபதி 63 படத்தில் நடிக்கிறார். இந்த படம் விளையாட்டு தொடர்பான கதை மையப்படுத்தியது என பலரும் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 125 கோடி ருபாய் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.