கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது.

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள ‘சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. ‘ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான இந்த படத்தை தியேட்டர்களில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதை ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளன. இது தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
படத்தின் கதையானது, அடிதடியில் இருந்து ஒதுங்க நினைக்கும் கேங்ஸ்டரும், அவன் காதலியும், அவனை துரத்தும் பழைய ரவுடியையும் சுற்றி நடக்கும் கதையே ரெட்ரோ. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளபோதும், இந்த படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.19.25 கோடி வசூலை ஈட்டியதாக சொல்லப்படுகிறது.
வர்த்தக வலைத்தளமான சாக்னில்க் தெரிவித்தபடி, தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17.25 கோடியை வசூலித்தது, தெலுங்கு மற்றும் இந்தி முறையே ரூ.1.95 கோடி மற்றும் ரூ.5 லட்சத்தை வசூலித்தன. முன்னதாக, கங்குவா திரைப்படத்தின் மிகப்பெரிய தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு இது ஒரு ரீ என்ட்ரியாக திரைப்படமாக இருக்கும்.
இருப்பினும், வசூலில் ரெட்ரோ கங்குவா படத்தை விட, குறைவாகவே வசூலித்துள்ளது. அதாவது, கங்குவா திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.28 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், ரெட்ரோ படம் இந்தியா முழுவதும் ரூ.19.25 கோடி வசூலை ஈட்டிருக்கிறது. கங்குவா பெரிய பட்ஜெட் மட்டுமின்றி, பல மொழிகளில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.