இரட்டைக் கொலை., திமுக ஆட்சியின் லட்சணமா? இபிஎஸ் கடும் கண்டனம்!

திமுக ஆட்சியில் தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ADMK Chief secretary Edappadi Palanisamy

சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி – பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை வீட்டில் வசித்து வந்த அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாக இன்று காலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

பணம், நகைக்காக தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனபோலீசார் தங்கள் விசாரணையை தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே திருப்பூர் பல்லடம் அருகே இதே பண்ணை வீட்டில் 3 பேர் கொலை செய்யபட்டதை அடுத்து அதே போன்ற இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், ” ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, “சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று பெருமை பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்.

  • 1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை செய்து 27 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
  • 9 செப்டம்பர் 2023 – ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டு 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
  • 29 நவம்பர் 2024 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
  • 13 மார்ச் 2025 – திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
  • 14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை “தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்” என்பதற்கு இந்த திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?

தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இந்த கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். என தனது கண்டன அறிக்கையை பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்