ஆசியாவில் முதல் முறை.. நிஜ சிங்கத்துடன் தமிழ் சினிமா ஷூட்டிங்.! ஹீரோ யாரு தெரியுமா.?

மாம்போ : கடந்த 2022ல் செம்பி படத்தை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்திற்கு 'மாம்போ' என பெயரிடப்பட்டுள்ளது. சிறுவனுக்கும், சிங்க குட்டிக்கும்

Mambo Posters

மாம்போ :கடந்த 2022ல் செம்பி படத்தை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்திற்கு ‘மாம்போ’ என பெயரிடப்பட்டுள்ளது. சிறுவனுக்கும், சிங்க குட்டிக்கும் இடையிலான நட்பை கூறும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜயகுமாரின் பேரனும் வனிதா விஜயகுமாரின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி ஹீரோவாக நடித்துள்ளனர். ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் ஸ்ரீ ஹரி, இதற்கு முன் நைட்ட்ர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவிலேயே முதல் முறையாக நிஜ சிங்கத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் ஆசியப் படம் என்ற பெருமையை மாம்போ தமிழ் சினிமாவிற்கு பெற்று தந்துள்ளது.

பேரரசு, பொற்காலம், பாட்டாளி, வாஞ்சிநாதன் போன்ற படங்களை தயாரித்து புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான ரோஜா கம்பைன்ஸ்18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தை தயாரிக்கிறார்.

மேலும் படத்தில், யோகி பாபு, தேஜஸ்வி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரபு சாலமனின் மகன் சாமுவேல் சஞ்சய், மம்போ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார், டி.இமான் இசையமைக்கிறார்.