சூர்யா கூட டேட்டிங் போனும்…விஜய் கூட? துஷாரா விஜயன் ஓபன் டாக்!

dushara vijayan

சென்னை : இந்த காலத்தில் இருக்கும் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை ஒரு வெற்றி படத்தில் நடித்து விட்டார் என்றால் படம் வெளியான பல மாதங்கள் அந்த நடிகை தான் ட்ரெண்டிங்கில் இருப்பார். இளைஞர்கள் அனைவரும் அந்த நடிகையின் புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துகொண்டு இருப்பார்கள் அப்படி தான் தற்போது ராயன் படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

துஷாரா விஜயன் படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் நடிப்பது போல தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கும் வெளிப்படையாகவே பதில் அளித்து விடுவார். அப்படி தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் டேட்டிங் செல்ல ஆசைப்படும் நடிகர் பற்றியும் விஜய் படத்தில் நடிக்க ஆசைப்படுவது பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

பேட்டி ஒன்றில் அவரிடம் தொகுப்பாளர் சினிமாவில் இருக்கும் ஹீரோக்களில் இருவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் சம்பளம் கூட வாங்காமல் எந்த ஹீரோ படத்தில் நடிப்பீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதில் கூறிய துஷாரா விஜயன்  ” எனக்கு விஜய் சாருடன் நடிக்க ஆசை இருக்கிறது. கண்டிப்பாக வாய்ப்பு வந்தால் நடிப்பேன் “ என்று கூறியுள்ளார்.

அடுத்த கேள்வியாக இந்த நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதில் சொன்ன துஷாரா விஜயன்  ” இந்த கேள்விக்கு பதில் சொன்னால் ஜோதிகா மேடம் என்னை அடிப்பாங்க இருந்தாலும் சொல்றேன் எனக்கு சூர்யா சாருடன் டேட்டிங் செல்ல ஆசை இருக்கிறது “ என கூறியுள்ளார்.

அடுத்த கேள்வியாக இந்த ஹீரோ படத்தில் நடிக்க கதையே தேவை இல்லை என்றால் எந்த ஹீரோ படத்தில் நடிப்பீர்கள்? என்ற கேள்வியை தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் கூறிய துஷாரா விஜயன்  ” அப்படி கதை கூட கேட்காமல் நடிக்கலாம் என்றால் நான் தலைவர் ரஜினிகாந்த் படத்தில் நடிப்பேன்” என கூறியுள்ளார்.

மேலும், நடிகை துஷாரா விஜயன் ராயன் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படம் பற்றி ” எனக்கு படத்தில் மிகவும் பெரிய சக்தி வாய்ந்த கதாபாத்திரம் கிடைத்து இருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்