யாதும் ஊரே யாவரும் கேளீர் – விஜய் சேதுபதிக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குனர்!

It has been reported that Vijay Sethupathi is currently set to play the villain in the upcoming film Yathum Ure Yavarum Kelir.

விஜய் சேதுபதி தற்போது நடித்துவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரகுநாத் அவர்கள் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் ஆகியோர் இணைந்து நடிக்க கூடிய புதிய தமிழ் திரைப்படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளீர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் சேதுபதி நடிக்கும், யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.