“எல்லாரும் நமக்கு கீழ தான் நினைக்கிறது பிரியங்கா”…அன்றே கணித்த தாமரை!
நாம் மட்டும் தான் உசத்தி மற்றவர்கள் நம்மளுடைய கீழ் என நினைக்ககூடிய குணம் கொண்டவர் பிரியங்கா தான் என்று தாமரை கூறியுள்ளார்.

சென்னை : தொகுப்பாளினி பிரியங்கா இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்குவார் என அவரே நினைத்து பார்த்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு காரணமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது தான் என்றே சொல்லலாம்.
ஏனெனில், நிகழ்ச்சியில் மணிமேகலையை அவருடைய தொகுப்பாளினி வேலையை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தை பிரியங்கா செலுத்தியுள்ளார். இதன் காரணமாக, நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக, வேதனையுடன் மணிமேகலை அறிவித்திருந்தார். இதனையடுத்து, பிரியங்காவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே பிரியங்காவின் உண்மையான குணம் இது தான் என சக போட்டியாளர்கள் கணித்து அவரை திட்டவும் செய்திருந்தார்கள். அந்த சமயம், இது பெரிய அளவில் வெளிவரவில்லை, என்றால் இப்போது, மணிமேகலை பிரச்சனை போய்க்கொண்டு இருப்பதால், முன்னதாக அவர்கள் பேசிய, வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, பிடிக்கைலைனா பிரியங்கா சாக்கடைல தள்ளிருவாங்க என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நிரூப் நந்தகுமார் பேசியிருந்த வீடியோ வைரலானது. அதனைத்தொடர்ந்து அடுத்ததாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த தாமரை பேசிய அந்த பழைய வீடியோவையும் நெட்டிசன்கள் வைரலாக்கி பிரியங்காவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
பிரியங்காவுக்கும் தாமரைக்கும் ஏற்கனவே, நிகழ்ச்சியில் இருந்தபோதே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்படுவது உண்டு. அப்படி ஒரு முறை வாக்குவாதம் ரொம்பவே அதிகமான சமயத்தில், பிரியங்காவை பற்றி தாமரை கூறியதாவது ” நான் பார்த்தவரை நம்மளோட பேச்சு மட்டும் தான் உசத்தியாக தெரியவேண்டும்… மற்றவர்களுடைய பேச்சு குறைவாக தெரியவேண்டும் என நினைக்க கூடியவர் பிரியங்கா.
நாம் மட்டும் தான் உசத்தி மற்றவர்கள் நம்மளுடைய கீழ் உள்ளவர்கள் என்று நினைக்ககூடியவர் பிரியங்கா தான்” என கூறியுள்ளார். இவர் பேசிய அந்த வீடியோ பற்றி எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல வைரலாகி வரும் நிலையில், பிரியங்கா உண்மை முகத்தை அன்றே கணித்த தாமரை என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025