இணையத்தில் வைரலாகும் நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள்.!

Actor Srikanth's family photos have gone viral on social media.

நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த்.அதன்பின் காணாமல் போன இவருக்கு விஜய்யின் நண்பன் படம் தான் மீண்டும் பிரபலமாக்கியது .தற்போது இவர் மிருகா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தினை தொடர்ந்து மஹா ,காக்கி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2007-ம் ஆண்டு தனது காதலியான வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவருக்கு மகன்,மகள் உள்ளனர்.இந்த நிலையில் ஸ்ரீகாந்தின் மகனான ஆகிலின் 12-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார்.அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.குடும்பத்துடன் ஸ்ரீகாந்த் இணைந்துள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருவதுடன் லைக்குகளும் கமென்ட்களும் குவிந்து வருகிறது.பலரும் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என்று கேள்வி கேட்டும் வருகின்றனர்.

unknown node