சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

The producer has said that famous actor Vagai Chandrasekhar has joined Simbu in the conference film in which he is currently acting.

சிம்பு தற்போது நடித்து வரும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்பு சுசீந்திரனின் இயக்கத்தில் ஈஸ்வரன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின் புயல் மற்றும் சூறாவளி ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தாமதம் ஆன நிலையில், புயலுக்குப் பின் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனவே, மீண்டும் படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இந்த மாநாடு படத்தில் பாரதிராஜா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சிம்புவின் மாநாடு படத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிரபல நடிகர்!