சூப்பர் ஸ்டாரின் படத்தில் முதல் முறையாக நடிக்கும் பிரபல நடிகர் இவர்தானாம்

This news gives information about Famous actor who plays for the first time in a superstar-superstarin padthil muthal muthalaka nadikum pirabala nadikar ivar thanam

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டராக நடிகர் ரஜினி வலம் வருகிறார்.

இந்நிலையில் ரஜினியும் முருகதாஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகிறது.

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டராக நடிகர் ரஜினி வலம் வருகிறார். இந்நிலையில் ரஜினியும் முருகதாஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகிறது என்பது உறுதியாகி விட்ட நிலையில் இவர்களின் படத்தின் டைட்டில் “தர்பார் ” என்று வைத்து  நேற்று ரசிகர்களை கொண்டாட வைத்து விட்டது படக்குழு.

இந்த படத்தின் டைட்டிலை வரவேற்ற ரஜினி ரசிகர்கள் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் மிகவும் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளது படக்குழு.

இந்த படத்தில் படப்பிடிப்பிற்காக ரஜினியும் ,நயன்தாராவும் மும்பை சென்றுள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்கும் யோகிபாபு,  ரஜினியுடன் சேர்ந்து  முதல் முறையாக நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தற்போது யோகிபாபுவும் நடிக்க இருக்கிறாராம்.

சூப்பர் ஸ்டாரின் படத்தில் முதல் முறையாக நடிக்கும் பிரபல நடிகர் இவர்தானாம்