அஜித்திற்காக நீங்க இத கண்டிப்பா செய்யணும் என போனிகபூரிடம் வேண்டிய ரசிகர்கள்

This news gives information about For Ajith, ponikappor have to make sure that this will be done by fans-ajithirkaka neenka itha kandipa seiyanum ena ponikapooridam vendiya rasikarkal

அஜித்தின் ரசிகர்கள் போனிகபூரிடம் அஜித்தை வைத்து ஒரு முக்கிய படத்தை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டு வருகிறார்கள்.

தல அஜித்  தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாட பட்டு வரும் நடிகர் மட்டுமல்லாமல் இவர் ஒரு முன்னணி நடிகரும் கூட . இந்நிலையில் இவரின் படங்கள் திரைக்கு வந்தால் ரசிகர்களுக்கு அது மிக பெரிய கொண்டாட்டம் தான்.

இவரின் “விஸ்வாசம்” பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்து சக்க போடு போட்டு ஒரு மாபெரும் வசூல் வேட்டையை நடத்தி பல குடும்ப ஆடியன்ஸ்களை கவர்ந்தது.மேலும் இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இதையடுத்து தற்போது போனிகபூர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போனி கபூர் தற்போது அஜித்தை கண்டிப்பாக எனக்காக பாலிவுட்டில் படம் பண்ணனும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும் அவரை தன் வசம் 3 கதைகளை வைத்துள்ளதாகவும் அஜித்தை தான் கதையை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அஜித்தின் ரசிகர்கள் போனிகபூரிடம் அஜித்தை வைத்து “தூம் 4 ” எனும் படத்தை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டு வருகிறார்கள்.