Movies releasing tomorrow

‘அன்னபூரணி’ முதல் ‘அனிமல்’ வரை நாளை திரைக்கு வரும் திரைப்படங்கள்.!

By

கோலிவுட்டில் ஒவ்வொரு வாரமும் திரைப்படங்கள் வெளியாகிறது. இருப்பினும், சில வாரங்கள் திரைப்பட வெளியீடுகள் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (டிசம்பர் 1ம் தேதி) வெளியாகும் ஆறு தமிழ்ப் படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

அன்னபூரணி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75வது படமான “அன்னபூரணி” அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார்.  ஸ்டுடியோஸ், நாட் எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உணவு அரசியலை பேசுகிறதா நயன்தாரா படம்? கவனம் ஈர்க்கும் அன்னபூரணி ட்ரைலர்.!

படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் பிராமண பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, இந்தியாவிலேயே ஒரு சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற தனது கனவை வளர்த்து வருகிறார். பின்னர், கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே அன்னபூரணி படத்தின் கதை.

அனிமல்

அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வன்முறை – தந்தை பாசமும் கலந்து மிரட்டும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ டிரைலர்!

சாக்லேட் பாயாக இருக்கும் ரன்பீர் கபூர், கொடூரனாக மாறும் அப்பா – மகன் பாசக் கதையில, கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என இரு கெட்டப்பில் ரன்பீர் முதன்முறையாக ஒரு மாஸ் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பார்க்கிங்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நெகட்டிவ் ரோலில் நடிக்க ரொம்ப நாளா ஆசை – சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண்!

மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், ராம ராஜேந்திரன், இளவரசு ஆகியோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

வா வரலாம் வா

இயக்குனர்கள் சுரேஷ் பாபு மற்றும் ஆர் , எல்.ஜி ரவிச்சந்தர் ஆகியோர் இணைந்து இயக்கிய “வா வரலாம் வா” படத்தில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ் , மஹானா சஞ்சீவி , ரெடின் கிங்ஸ்லி , மைம் கோபி , சிங்கம் புலி , சரவண சுப்பையா, தீபா சங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ராஜா முகமதுஎடிட் செய்ய, கார்த்திக் ராஜா ஒளிப்பதி செய்துள்ளார்.

நாடு

இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். மேலும், கூகுள் குட்டப்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது ‘நாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ள சரவணன் இயக்கியுள்ளார். ஸ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் தயாரிக்க., சத்யா இசையமைக், சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சூரகன்

சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், வி.கார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரகன்’. கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் வி.கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல் ரவி மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Dinasuvadu Media @2023