கிரைம் திரில்லர் படத்தில் இணையும் கௌதம் கார்த்திக்-பார்த்திபன் .! இயக்குனர் யார் தெரியுமா.?

Gautham Karthik and Parthiban will co-star in the next film directed by Ezhil. It is a crime thriller Movie .

இயக்குனர் எழில் இயக்கும் அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர் .இது ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

துள்ளாத மனமும் துள்ளும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எழில் தற்போது ஜிவி.பிரகாஷின் “ஆயிரம் ஜென்மங்கள்” மற்றும் விஷ்ணு விஷாலின் “ஜகஜல கில்லாடி” உள்ளிட்ட படங்களை இயக்கி முடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார் .இதில் கௌதம் கார்த்திக் தனியார் துப்பறியும் நிறுவன ஊழியராகவும் , பார்த்திபன் போலீசாகவும் நடிக்கவுள்ளனர். கிரைம் எழுத்தாளரான ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி உருவாக்கப்படும் இந்த படத்தில் சாய் ப்ரியா தேவா ,ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க இமான் இசையமைக்கவுள்ளார்.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படம் ஒரு கொலை சம்பத்தை மையமாக கொண்டு ஒரு கிரைம் திரில்லராக உருவாகிறது .

இந்த படத்தின் பூஜை நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.