தளபதி 63 படத்தில் இணைந்த நடிகர் ஷாருக்கான்

This news gives information about Actor Shahrukh Khan joined the thalapathi 63

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் “ராஜா ராணி ”  ,”தெறி ” , “மெர்சல் “ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக அட்லீ விஜய் வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.படத்தின் பெயரை அட்லீ வெளியிடாத நிலையில் ரசிகர்கள் “தளபதி 63″என பெயர் வைத்து உள்ளனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோர்  நடித்து வருகின்றனர்.

படத்திற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக  ஷாருக்கான் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு ஏற்ப சமீபத்தில்  சென்னைக்கும் -கொல்கத்தாவிற்கும் சென்னையில் நடந்த நடைபெற்ற ஐபில் போட்டியில் இருவரும் அருகில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதனால்  “தளபதி 63” படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

unknown nodeunknown nodeunknown node