விஜய் படங்கள் வெளியானால் கண்டிப்பாக அதற்கு முன்பு அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்துவிடும். அதில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றையும் கூறுவார். கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
unknown nodeMaster Audio Launch [Image Source: Twitter]
பிறகு இந்த ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தார்கள். பிறகு விஜய்யுடன் நேர்காணல் என்று நெல்சன் அவரை பேட்டி எடுப்பதுபோல ஒரு நேர்காணல் மட்டும் நடந்தது.
இதையும் படியுங்களேன்-சொன்ன நேரத்திற்கு வராத நயன்தாரா… படத்தில் இருந்து அதிரடியாக தூக்கிய முன்னணி இயக்குனர்.!
unknown nodeVarisu [Image Source: Twitter]
இந்த நிலையில், தற்போது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeVarisu [Image Source: Twitter ]
இந்த தகவல் உண்மையான பிறகு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு விஜய் என்ன குட்டி கதை கூற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.