தளபதி 66 படத்தில் இணையும் தனுஷ் பட நடிகை.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

unknown node

இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் பிரபல நடிகையாக வளம் வரும் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தளபதி 66 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் தனுஷிற்கு ஜோடியாக பட்டாசு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.