தமிழ் சினிமாவில் விக்ரம் வைத்து சேது திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாலா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் நந்தா, பிதா மகன், ஆர்யாவின் நான் கடவுள் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
unknown nodeமேலும், இதில் ‘நான் கடவுள்’ திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
unknown nodeமேலும், இயக்குனர் பாலா முத்து மலர் என்பவரை காதலித்து கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 17 வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தற்போது சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.