வலிமை திரைப்படம் சென்னையில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

விமர்சனங்ள் எப்படி வந்தாலும் படம் வசூல் தாறுமாறாக செய்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் இப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளது. இதனையடுத்து சென்னையில் மட்டும் இப்படம் எதனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

unknown node

அதன்படி, சென்னையில் வெளியான 11 -நாளில் வலிமை திரைப்படம், ரூ. 8.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மட்டும் அதிகமாக வசூல் செய்துள்ளது. நாளுக்கு நாள் வலிமை திரைப்படத்தின் வசூல் அதிகரித்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

மேலும், வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் தனது 61-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது எனவும், அதற்கான பூஜை வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.