கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
unknown nodeராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
unknown nodeபடத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 25-நாட்கள் ஆகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் ட்வீட்டரில் ஹேஸ்டேக் கிரியேட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
unknown nodeஇந்த நிலையில், தற்போது விக்ரம் படம் எப்போது ஓடிடியில் வெளியாக போகிறது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, விக்ரம் படம் வரும் ஜூலை 1-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது