ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி கேட்ட சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
unknown nodeபெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
unknown nodeபடத்திற்கு ஆர்சி தாற்காலிகமாக 15-என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.
unknown nodeஇந்நிலையில், இந்த படத்தில் நடிக்க நடிகை கியாரா அத்வானி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை கியாரா அத்வானிக்கு, ரூ. 5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.