தளபதி 65 படத்திற்கான தலைப்பு என்ன தெரியுமா..?

It has been reported that thalapathy-65 has named the film 'Target'.

தளபதி-65 படத்திற்கு ‘டார்கெட்’ என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் தளபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் 65-வது படத்திற்கு ‘டார்கெட்’ என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.எனினும் விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.