அடடே இவங்களா தளபதி 66 மற்றும் 67-வது படத்தினை இயக்குவது.? யார் யார் தெரியுமா.?

It has been reported that Lokesh Kanagaraj is likely to direct Commander Vijay's 66th film and Adly is likely to direct Commander 67.

தளபதி விஜய்யின் 66-வது படத்தினை லோகேஷ் கனகராஜூம் ,தளபதி 67 படத்தினை அட்லியும் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

அதில் தளபதியின் 66-வது படத்தினை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.தற்போது வெளியான தகவலின்படி, தளபதியின் 66-வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இவர் சமீபத்தில் வெளியான தளபதியின் மாஸ்டர் படத்தினை இயக்கினார் என்பதும் ,66வது படத்திற்காக தளபதி விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போன்று தளபதி 67 படத்தினை இயக்குவது யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.அதாவது தளபதியின் 67-வது படத்தினை அட்லி இயக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே இவர் விஜய்யின் பிகில்,தெறி ,மெர்சல் ஆகிய 3 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.உண்மை என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.