ரூ.10 கோடிக்கு விலை போன 'டாக்டர்'.!

It has been reported that Sivakarthikeyan's Doctor movie has been sold to a popular OTT company for Rs 10 crore.

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்றிற்கு ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று டாக்டர்.கோலமாவு கோகிலா பட இயக்குனரான நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்திலிருந்து வெளியான செல்லம்மா, நெஞ்சமே,so baby ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள டாக்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனம் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு டாக்டர் படத்தினை ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.