டாக்டராக களமிறங்கிய சிவகார்த்திகேயன்! மீண்டும் மருத்துவத்துறை குற்றங்களா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக ஹீரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக ஹீரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கியிருந்த நெல்சன் இயக்கத்தில் டாக்டர் எனும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் பட நிறுவனமும், கே.ஜே.ஆர் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது.

இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விடீயோவிலேயே இது மருத்துவத்துறை பற்றிய படம் என விளக்குகிறது. ஒரு வேலை இப்படம் சிவகார்த்திகேயன் நடித்திருந்த காக்கி சட்டை படம் போல இருக்குமோ என என்ன வைக்கிறது.