12 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.?!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பீஸ்ட்" திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை. இயக்குனர் வம்சி இயக்கியவுள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு தற்காலிகமா “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

unknown node

கடந்த சில நாட்களுக்கு முன்பு தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகர் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

தமன்னா இதற்கு முன்பு விஜய்க்கு ஜோடியாக கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான சுறா படத்தில் நடித்திருந்தார். இந்த தளபதி 66 படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி விட்டால் 12 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்படுகிறது.

unknown node

Vamsi Paidipally, Tamanna @ Oopiri Song Launch at Radio City, Hyderabad

மேலும், வம்சி இயக்கத்தில் நாகஅர்ஜுன், கார்த்தி நடிப்பில் வெளியான படத்தில் தமன்னாவும் நடித்திருந்தார் குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள், இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.