நான்காவது முறையாக விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்திற்கான இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது.

unknown node

இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடிப்பார் என உறுதியான ஒரு தகவலும் பரவி வருகிறது. இதனை தயாரிப்பு நிறுவனமே வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் காட்சிகளை கொண்டு இந்த படம் எடுக்கப்படவுள்ளதாகவும், 100% லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தான் விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர்.

unknown node

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நான்காவது முறையாக பிரபல நடிகையான சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்பு விஜய்யின் மெர்சல், தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.