தளபதி பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்.. ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்....

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

unknown node

இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 22-ஆம் தேதி டைட்டிலுடன் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தமன் இசையில், ஒரு மோஷன் போஸ்டர் கூட எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுகிறது.

unknown node

இந்த வருடம் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 66 அப்டேட் மட்டுமில்லயாம், தளபதி 67 படத்திற்கான அப்டேட்டும் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

unknown node

அநேகமாக இந்த அறிவிப்பு தான் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் மற்றோரு தகவல் பரவி வருகிறது. எது எப்படியோ விஜயின் பிறந்த நாள் அன்று இரண்டு அப்டேட்டுகள் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.