கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் கிடப்பில் உள்ளன. அதற்கிடையில் தற்போது புதிய படம் ஒன்றை கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
unknown nodeகாக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் ஒரு படத்தில்இணைய உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக அண்மையில் லண்டன் சென்று இப்படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் சூர்யா – கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.