தளபதி-65 படத்தின் வில்லன் இவர் தான்.! விக்கிப்பீடியாவால் உறுதியான மாஸ் தகவல்.!

It has been reported that Arun Vijay will play the villain in thalapathy-65.

தளபதி-65 படத்தின் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .

மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்கள்.மேலும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

மார்ச் 15-ம் தேதி முதல் ரஷ்யாவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக பல நடிகர்களின் பெயர்கள் அடிப்பட்டது.தற்போது அது குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏனெனில் விக்கி பீடியாவில் அருண் விஜய்யின் அடுத்த படங்களுக்கான லிஸ்டில் தளபதி 65 படமும் சேர்ந்துள்ளதாம்.இதன் மூலம் தளபதி 65 படத்தின் வில்லன் அருண் விஜய் என்பதை ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர் . இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை