சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார்கள்.
unknown nodeஇந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள்,டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்தது என்றே கூறலாம். குறிப்பாக மாநாடு, அண்ணாத்த, டான், வலிமை ஆகிய படங்களின் டிரைலரை விட லெஜெண்ட் டிரைலர் தான் அதிகம் பார்வையாளர்களை பெற்றிருந்தது.
unknown nodeஎன்னதான், அண்ணாச்சியை பலர் கிண்டல் செய்தால் கூட அதனை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு, தனக்கான வேலையை செய்துகொண்டு வருகிறார். இந்த படம் தோல்வி அடைந்தாள் கூட அடுத்தடுத்து படங்களில் நடித்து ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுக்காமல் விடவேமாட்டாராம்.
unknown nodeஇந்த நிலையில், “தி லெஜெண்ட்” படம் வெளியாகும் தேதி குறித்த ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, படம் வரும் ஜூலை 15-ஆம் தேதி வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 15 எந்த பெரிய திரைப்படமும் வெளியாகவில்லை என்பதால், அண்ணாச்சி அந்த தேதியை கூறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.