நானே வருவேன் படத்தில் இணையும் சிலம்பாட்டம் பட பிரபலம்.!?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

unknown node

இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதற்கு முன்பு தனுஷ் -செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை. காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

unknown node

இந்த படங்களை தொடர்ந்து தற்போது, மீண்டும் நானே வருவேன் படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிக அதிகமாகவுள்ளது.

unknown node

இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஊட்டியில் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் முடிந்துவிடும். இதனையடித்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

பிரபு தற்போது இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், பிரபு ஏற்கனவே 3 படத்தில் தனுஷிற்கு தந்தையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.