இயக்குனர் செல்வராவான் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான “நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
unknown nodeஇந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். நானே வருவேன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
unknown nodeஅது என்னவென்றால், நானே வருவேன் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி இணைந்து அதிரடி கேங்ஸ்டார் படம் ஒன்று செய்யவுள்ளார்களாம். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தில் தனுஷ் மிகப்பெரிய ரௌடியாக நடிக்கவுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்-வச்சு செஞ்சிட்டேன்… அதை பண்ணி செலெக்ட் ஆன ஒரே ஹீரோயின் நான் மட்டும் தான்.! ஐஸ்வர்யா ராஜேஷ் சீக்ரெட்.!
unknown nodeகிட்டத்தட்ட புதுப்பேட்டை படம் அளவிற்கு அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் இருக்குமாம். படத்திற்கு தலைப்பு கூட ராயன் என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தையும் கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.