பிரபல இசையமைப்பாளரை திருமணம் செய்து கொள்ள போகிகிறாரா கீர்த்தி சுரேஷ்.?

Actress Keerthi Suresh is reportedly getting married to popular composer Anirudh.

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல இசையமைப்பாளரான அனிருத்தை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதாவது கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தை திருமணம் செய்ய உள்ளதாக சில நெட்டிசன்கள் தகவல்களை பரப்பி வருகின்றனர்.இவர் சமீபத்தில் அனிருத்தின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இருப்பினும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.