கோப்ரா படத்தில் இர்பான் பதான் கதாபாத்திரம் இதுதானா.?

It has been reported that Irfan Pathan plays a French police officer in the movie Cobra.

கோப்ரா படத்தில் இர்பான் பதான் பிரஞ்சு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பினை தொடங்கியது . ரஷ்யாவில் மும்மரமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டி , இர்பான் பதான் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்கள் .இந்த நிலையில் தற்போது கோப்ரா பட வில்லனின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது விக்ரமுக்கு வில்லனாக நடித்துள்ள இர்பான் பதான் கோப்ரா படத்தில் பிரஞ்சு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.