கார்த்தியின் சர்தாருடன் மோதும் ஜெயம் ரவி.?

இந்த வருடம் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று பல திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தி

இந்த வருடம் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று பல திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தி நடித்து வரும் சத்தார் தீபாவளி அன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

unknown node

இந்த அறிவிப்பை தொடர்ந்து, மற்றோரு திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் இறைவன்.  இந்த படத்தில் ஜெயம் ரவிக்கும் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

unknown node

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின்  படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.  தற்போது விறு விறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனையடுத்து இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது.

unknown node

கார்த்தியின் சர்தார் படமும், ஜெயம் ரவியின் இறைவன் படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதால் எந்த படம் அதிகமாக வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெரிய படங்கள் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில், அஜித்தின் 61-வது படத்தையும் தீபாவளி அன்று வெளியீட தான் திட்டமிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.