இந்தியன்-2வில் கமல்ஹாசன் மனைவி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா?! வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். சித்தார்த், பிரிய பவனிசங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

இப்படத்தில் கமல்ஹாசன் முதல் பாகம் போலவே விடுதலை போராட்ட வீரர் சேனாதிபதியாக நடித்து வருகிறார். அவரது 90 வயது தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தற்போது முதல் பாகத்தில் கமலுக்கு மனைவியாக நடித்த நடிகை சுகன்யா கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நடிகை சுகன்யா நடித்திருந்த அமிர்தவள்ளி கதாபாத்திரத்தில் பிரியா பவானிசங்கர் தான் நடிக்கிறாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இப்படம் பற்றிய மேலும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.