'பொன்னியின் செல்வன்' ரிலீஸ் குறித்து மணிரத்னம் போட்டு வைத்திருக்கும் மாஸ்டர் பிளான்.!

It has been reported that the next phase of filming of Ponniyin's Selvan is scheduled to take place in and around Jaipur

பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜெய்ப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.அந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட ஒரு சில நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.

அந்த வகையில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இடைவெளி இல்லாமல் நடத்தப்பட்டு வரும் படப்பிடிப்பு மார்ச் 5-ம் தேதியோடு முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பினை ஏப்ரல் மாதம் முதல் ஜெய்ப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் வைத்து தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து படப்பிடிப்பை முடிக்கும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கிராபிக்ஸ் பணிகளையும் முடித்து விட்டு அடுத்தாண்டு முதல் பாதியில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது . அதற்கு அடுத்த பாகத்தை அதே ஆண்டில் முதல் பாகம் வெளியாகி 6 மாதம் கழித்து வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.