தளபதி-65 படத்தின் மாஸ் அப்டேட்.!

Filming for thalapathy-65 is set to begin in Russia in the first week of April.

தளபதி-65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் ரஷ்யாவில் வைத்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.மேலும் இந்த படத்தின் ஹீரோயின், வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்பது குறித்த பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளி வந்தது.ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது தளபதி-65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.