இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்ரஹ்மான் இசைமைத்துள்ளார்.
unknown nodeஇந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து டீசர், மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்களேன்-திருட்டு கதை சர்ச்சை… “விருமன்” திரைப்படம் வெளியாவதில் சிக்கல்…?
unknown nodeஇதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம்.
unknown nodeஇந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொள்வார்களாம். ஏனென்றால் இதற்கு முன்பு டீசர் மற்றும் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் கொஞ்சம் கொஞ்சம் பேர்கள் தான் கலந்து கொண்டிருந்தார்கள். எனவே, இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக படத்தில் நடித்த அனைவரையும் அழைக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
unknown nodeஇந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.