புஷ்பா- 2 திரைப்படத்தில் வில்லியாக களமிறங்கும் பிரபல நடிகை..?

புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்த நிலையில், இரண்டாவது பாகம் விறு விறுப்பாக உருவாகி வருகிறது. முதல்

புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்த நிலையில், இரண்டாவது பாகம் விறு விறுப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள்.

unknown node

Pushpa 2 [Image Source: Twitter ]

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார். விரைவில் படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.

unknown node

Pushpa 2 Kajal Agarwal [Image Source: Twitter ]

இதற்கிடையில், அவ்வபோது படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த தகவலும் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை காஜல் அகர்வால் கவர்ச்சி நடனம் ஆடவிருப்புவதாக தகவல்கள் கசிந்தது.

இதையும் படியுங்களேன்-நீங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்..! பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 படங்கள்.!

unknown node

Catherine Tresa pushpa2 [Image Source: Google]

இந்நிலையில், இதனை தொடர்ந்து,  படத்தில் வில்லியாக ஒரு நடிகை நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை, கேத்தரின் தெரசா தான். தொடர்ந்து வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் கேத்தரின் தெரசா புஷ்பா-வில் நடிக்கவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.