அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் சர்தார் பட ஷூட்டிங்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் "சர்தார்" படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் நடிப்பில்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் “சர்தார்” படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது.

unknown node

இதையும் படியுங்களேன்-கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.!

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ரஜிஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். கார்த்தி இந்தப் படத்தில் இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். வயதான தோற்றத்திலும், காவல்துறை அதிகாரியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

unknown node

இந்த படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது. படம் வெளியாக இன்னும் பல மாதங்கள் இருப்பதால் படத்தின் படப்பிடிப்பை பார்த்து பார்த்து ஒவ்வொரு காட்சிகளையும் படமாக்கி வருகிறார்கள்.

unknown node

இந்த நிலையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாம். ஆம், படத்தில் பாராளுமன்ற வளாகத்திலேயே நடைபெறுவதுபோன்ற சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

unknown node

இதற்காக, பிரத்யேகமாக அஜர்பைஜான் அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு காட்சிகள் நடத்தப்பட்டுள்ளதாம். மேலும், அஜர்பைஜான், ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் தயாரிப்பு நிறுவனம் சுமார் 4 கோடி ரூபாயை செலவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.