இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதி கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeVarisu Moive [Image Source: Twitter]
இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக படத்தின் முதல் பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeVarisu First Single From This Diwali [Image Source: Twitter]
வழக்கமாக தீபாவளி பண்டிகை என்றால் விஜய் படம் திரையரங்குகளில் வெளியாகும் ஆனால், படப்பிடிப்பு இன்னும் முடியாத தால் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனையடுத்து தீபாவளியான நேற்று வாரிசு படத்தின் முதல் படலாவது வெளியாகும் என அணைத்து விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
இதையும் படியுங்களேன்-விஜய்க்கு பிடித்த கதையை தயார் செய்து அவரிடம் கூறுவேன்.! ஹிட் பட இயக்குனர் ஓபன் டாக்.!
unknown nodeVarisu Pongal [Image Source: Twitter]
ஆனால், கையில் சுத்தியலுடன் வாரிசு படத்தின் போஸ்டர் ஒன்று மட்டும் தான் வெளியாகி இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், வாரிசு படத்தின் முதல் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் எனவும் அதிலிருந்து வரிசையாக அப்டேட்டுகள் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது.