தல ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி.! வலிமை படத்தின் ரிலீஸ் தேதி ரெடி.! எப்போது தெரியுமா.?

It has been reported that the valimai movie is scheduled to release on August 12.

வலிமை படத்தினை ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.இதனை கண்டித்து தல அஜித் வெளியிட்ட அறிக்கையில் சரியான நேரத்தில் வலிமை அப்டேட் வெளிவரும் என்றும்,இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை அப்டேட் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது தல அஜித்தின் வலிமை படத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இருப்பினும் தல ரசிகர்கள் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.