சிறுத்தை சிவாவுடன் கைகோர்க்கும் சூர்யா.!?

சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.

சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சி மற்றும் தமிழகத்தின் குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. இது முடிந்துவிட்டால் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிடும்.

unknown node

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை, பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார்.

unknown node

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகவுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.